களத்தில் இறங்கிய அன்பில் அவன் படக்குழு: நகரமெங்கும் தீவிரமாகும் விளம்பரப் பணிகள்
அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள 'அன்பில் அவன்' திரைப்படத்தின் வெளிக்கள விளம்பரப் பணிகள் (Outdoor Promotions) பல்வேறு நகரங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. முக்கிய சாலைகள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட போஸ்டர்கள் மற்றும் எல்இடி திரைகள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றன. கார்த்திக் கேன் இயக்கத்தில் ஐங்கரன் மற்றும் ஹாப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படக்குழுவினர் மேற்கொண்டு வரும் தீவிர விளம்பரங்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது. காதல், எமோஷன் மற்றும் விறுவிறுப்பான திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 25 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
· Kollywood Ent