'அன்பில் அவன்' படத்திற்கு அதிகரித்த காட்சிகள்: தயாரிப்பாளர் கே.ஏ.வி. பாண்டியன் நெகிழ்ச்சி!

'அன்பில் அவன்' படத்திற்கு அதிகரித்த காட்சிகள்: தயாரிப்பாளர் கே.ஏ.வி. பாண்டியன் நெகிழ்ச்சி!

திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் 'அன்பில் அவன்' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள ஆதரவு குறித்து தயாரிப்பாளர் கே.ஏ.வி. பாண்டியன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ரசிகர்களின் பேராதரவைத் தொடர்ந்து சனிக்கிழமை முதல் திரையரங்குகளில் காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். படத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் மற்றும் புரமோஷன் குழுவினர் அனைவருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். மக்களின் பாராட்டைப் பெற்று வரும் இப்படத்தை அடுத்தடுத்த வாரங்களிலும் இன்னும் பெரிய அளவில் விளம்பரப்படுத்த விரிவான திட்டங்களை வகுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். குடும்ப ரசிகர்களையும் இளைஞர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ள 'அன்பில் அவன்', திரையரங்குகளில் தொடர்ந்து மக்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், படக்குழுவின் இந்த முன்னெடுப்பு படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

· Kollywood Ent

பழைய செய்திகள்