அனிருத் கச்சேரியில் ஒலித்த கல்யாணி பிரியதர்ஷனின் பாடல்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

அனிருத் கச்சேரியில் ஒலித்த கல்யாணி பிரியதர்ஷனின் பாடல்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் மேடைக்கச்சேரி கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள 'சேஷம் மைக்-இல் பாத்திமா' திரைப்படப் பாடலுடன் தொடங்கியுள்ளது. மக்கள் தொடர்பு நிபுணர் பிரதீஷ் சேகர் தனது எக்ஸ் தளத்தில் இந்த கச்சேரி வீடியோவைப் பகிர்ந்து சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அனிருத்தின் கச்சேரி மேடையில் இந்த மலையாளப் படத்தின் துள்ளலான பாடல் அதிரடியாக ஒலித்ததும், அரங்கம் முழுவதும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாகக் கூச்சலிட்டு நடனமாடியுள்ளனர். மனு சி. குமார் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் வானொலி அறிவிப்பாளராக நடித்த இந்தப் படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். மேலும் தி ரூட் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. அனிருத்தின் இசை நிகழ்ச்சி மூலம் மலையாளத் திரைப்படப் பாடல் ஒன்று தமிழ் ரசிகர்களிடையேயும் பெருமளவில் பிரபலமாகி வருவது குறிப்பிடத்தக்கது. கல்யாணி பிரியதர்ஷனின் அடுத்தடுத்த புராஜெக்ட்களுக்கும் இந்த அதிரடி வரவேற்பு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

· Propratheesh

பழைய செய்திகள்