அனிருத் வெளியிட்ட 'அபோகாலிப்டோ' தனிப்பாடல்: விஜய் பிரகாஷ் இசையில் மதன் கார்க்கி வரிகள்!

அனிருத் வெளியிட்ட 'அபோகாலிப்டோ' தனிப்பாடல்: விஜய் பிரகாஷ் இசையில் மதன் கார்க்கி வரிகள்!

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் 'அபோகாலிப்டோ' என்ற புதிய தமிழ் சுயாதீன பாடலை வெளியிட்டுப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இப்பாடலுக்கு பிரபல பின்னணி பாடகரும் இசையமைப்பாளருமான விஜய் பிரகாஷ் இசையமைத்துள்ளார். கவிஞர் மதன் கார்க்கி தனது தனித்துவமான வரிகளால் பாடலை அலங்கரித்துள்ளார். நேஹா வேணுகோபால் இப்பாடலை பாடியுள்ளார். துவார் மியூசிக் நிறுவனம் இதனை தயாரித்து வெளியிட்டுள்ளது. சமீப காலமாக தமிழ் சுயாதீன இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் சூழலில், இந்த பாடலும் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

· Anirudhofficial

பழைய செய்திகள்