நெல்சனிடம் 'ஜெயிலர் 2' ஐடியாவை முதலில் சொன்னதே அனிருத் தான்: 'ஹுக்கும்' பாடல் பற்றி சுவாரசிய பகிர்வு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான மெகா ஹிட் திரைப்படமான 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவான பின்னணி குறித்து இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் சுவாரசியமான தகவலைப் பகிர்ந்துள்ளனர். நேர்காணல் ஒன்றில் பேசிய அனிருத், இயக்குநர் நெல்சனிடம் ஜெயிலர் இரண்டாம் பாகத்தை நாம் கட்டாயம் தொடங்க வேண்டும் என்று முதலில் யோசனை கூறியதே தான்தான் என்று வெளிப்படுத்தியுள்ளார். தொடக்கத்தில் நெல்சனுக்கு இரண்டாம் பாகம் எடுப்பதில் சில தயக்கங்கள் இருந்ததாகவும், ஆனால் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் வீச்சு மற்றும் முதல் பாகத்தின் திறந்த முடிவு காரணமாக இந்த கதைக்கு அடுத்த பாகம் அவசியம் என்பதை தான் வலியுறுத்தியதாகவும் அனிருத் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து நெல்சன் தனது புதிய கதைக் கருவை செதுக்கி இரண்டாம் பாகத்தை உறுதி செய்துள்ளார். மேலும் முதல் பாகத்தில் பட்டையைக் கிளப்பிய 'ஹுக்கும்' பாடல் ஜெயிலர் கதாபாத்திரத்தின் தனித்துவமான அடையாளமாக மாறிவிட்டதாகவும், இரண்டாம் பாகத்திலும் ரசிகர்களின் நாடித் துடிப்பை எகிற வைக்கும் வகையில் சரியான இடங்களில் அப்பாடல் கையாளப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

· @_movietamil

பழைய செய்திகள்