தளபதி 69 படத்தில் ஐந்தாவது முறையாக விஜய்யுடன் இணையும் அனிருத்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தளபதி 69 படத்தில் ஐந்தாவது முறையாக விஜய்யுடன் இணையும் அனிருத்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தளபதி விஜய் அவர்களின் 69வது திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளதை அனிருத் ரவிச்சந்தர் தனது எக்ஸ் பக்கத்தில் மிகுந்த உற்சாகத்துடன் உறுதிப்படுத்தியுள்ளார். கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய்யுடன் அனிருத் இணையும் 5வது கூட்டணி இதுவாகும். எச். வினோத் இயக்கத்தில் கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு லோஹித் மற்றும் ஜெகதீஷ் இணைந்து தயாரிப்புப் பணிகளை கவனிக்கின்றனர். சமூக அக்கறையும் ஆக்‌ஷனும் கலந்த விறுவிறுப்பான கதைகளத்தில் எச். வினோத் இப்படத்தை இயக்கவுள்ளார். விஜய்யின் திரையுலகப் பயணத்தில் மிக முக்கியமான படமாக பார்க்கப்படும் தளபதி 69 படத்திற்கு அனிருத் இசை அமைப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

· Anirudhofficial

பழைய செய்திகள்