யூடியூபில் 20 லட்சம் பார்வைகளைக் கடந்து ட்ரெண்டாகும் 'அன்னக்கிளியே' தனிப்பாடல் வீடியோ!
ஸ்மித் ஆஷர் மற்றும் தீக்ஷிதா கூட்டணியில் உருவாகியுள்ள 'அன்னக்கிளியே' என்ற சுயாதீன இசைப் பாடல் வீடியோ, யூடியூப் தளத்தில் 20 லட்சம் பார்வைகளைக் கடந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆல்பம் இசைப் பிரியர்களிடையே இப்பாடலுக்குக் கிடைத்துள்ள அமோக வரவேற்பைத் தயாரிப்புக் குழுவினர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர். விக்கி பப் மற்றும் ஜெய்சரோலா ஆகியோரின் நேர்த்தியான இயக்கத்தில் பவன் அலெக்ஸ் ஒளிப்பதிவில் இப்பாடல் மிக நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளது. கிராமிய மெட்டும் நவீன மேற்கத்திய இசைக் கோர்ப்பும் இணைந்த இந்த பாடல், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் தற்போது இளைஞர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகில் அனிருத் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் ஆதரவுடன் சுயாதீன இசைப் பாடல்களுக்குத் தற்போது சிறந்த களம் உருவாகி வருகிறது. அந்த வகையில் 'அன்னக்கிளியே' பாடலின் இந்த தொடர் வெற்றி, சுயாதீன இசைக் கலைஞர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
· Actor Kayal Devaraj