20 லட்சம் பார்வைகளைக் கடந்து இணையத்தில் ட்ரெண்டாகும் அன்னக்கிளியே வீடியோ பாடல்!

20 லட்சம் பார்வைகளைக் கடந்து இணையத்தில் ட்ரெண்டாகும் அன்னக்கிளியே வீடியோ பாடல்!

பிரகதி ஸ்ரீவஸ்தவா நடிப்பில் யுஎம்ஐ சவுத் மற்றும் அல்பூ ரெக்கார்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள 'அன்னக்கிளியே' சுயாதீன இசைப் பாடல் இணையத்தில் 20 லட்சம் (2 Million) ஸ்ட்ரீம்களைக் கடந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஸ்மித் ஆஷர் துள்ளலான கிராமிய மேற்கத்திய இசையமைப்பில் உருவாக்கியுள்ள இப்பாடலை பிரபல பாடகி தீக்ஷிதா மனோகரன் தனது காந்தக் குரலில் வசீகரமாய் பாடியுள்ளார். வண்ணமயமான காட்சி அமைப்புகள் மற்றும் பிரகதி ஸ்ரீவஸ்தவாவின் நளினமான நடன அசைவுகள் ரசிகர்களைக் கவர்ந்து, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தளங்களில் தற்போதைய ட்ரெண்டிங் பாடலாக மாறியுள்ளது. இளைஞர்கள் பலரும் இப்பாடலுக்கு ரீல்ஸ் செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சுயாதீன தமிழ் இசைத் துறை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில், அன்னக்கிளியே பாடல் பெற்றுள்ள இந்த இமாலயப் பார்வை எண்ணிக்கை இளம் படைப்பாளிகளுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது என இசை ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்