தூமகேது படத்தில் இருந்து 'அனுராக ரூபவதி' பாடல் வெளியீடு: செப்டம்பர் 25 ரிலீஸ்!

தூமகேது படத்தில் இருந்து 'அனுராக ரூபவதி' பாடல் வெளியீடு: செப்டம்பர் 25 ரிலீஸ்!

சுதி மேடிசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தூமகேது' திரைப்படத்திலிருந்து 'அனுராக ரூபவதி' என்ற ரொமான்டிக் மெலடி பாடலின் லிரிக்கல் வீடியோ யூடியூபில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எக்ஸ் தளத்தில் ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் பாடல் குறித்த அறிவிப்பைப் பகிர்ந்துள்ளது. அங்கித் மேனன் இசையமைப்பில் உருவான இப்பாடலை ஜியா உல் ஹக் தனது காந்தக் குரலில் பாடியுள்ளார், விநாயக் சசிகுமார் அழகிய காதல் வரிகளை எழுதியுள்ளார். பிரபல திரைப்பட இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களான சமீர் தாஹிர், ஷைஜு காலித், சஜின் அலி, அப்பாஸ் திருநாவாயா ஆகியோர் இணைந்து உயர் தொழில்நுட்பத் தரத்துடன் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். சன்னி மற்றும் மனுவின் சுவாரசியமான திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால், தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது.

· Apifilms

பழைய செய்திகள்