சூர்யாவின் ‘நந்தா’ பட தயாரிப்பாளரின் புதிய படம்: இளையராஜா இசையில் உருவாகும் புரொடக்‌ஷன் நம்பர் 3!

சூர்யாவின் ‘நந்தா’ பட தயாரிப்பாளரின் புதிய படம்: இளையராஜா இசையில் உருவாகும் புரொடக்‌ஷன் நம்பர் 3!

இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘நந்தா’ திரைப்படத்தைத் தயாரித்த அபராஜித் பிலிம்ஸ் கணேஷ் ரகு, தனது தயாரிப்பு நிறுவனத்தின் 3-வது படத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். இத்திரைப்படம் குறித்த அறிவிப்பை பிரபல மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்பது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. பிரபல படத்தொகுப்பாளர் எடிட்டர் ராமராவ் இப்படத்தை இயக்குகிறார். இளையராஜாவின் இசை மற்றும் அழுத்தமான கதைக்களம் இணையும்போது, இப்படமும் ஒரு தரமான படைப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பு சினிமா வட்டாரங்களில் எழுந்துள்ளது. அபராஜித் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ள முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த கூடுதல் அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

· Nikil Murukan

பழைய செய்திகள்