அபராஜித் பிலிம்ஸ் தயாரிப்பு எண் 3: புதிய குழுவினரை வரவேற்ற தயாரிப்பு நிறுவனம்
திரையுலகில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் அபராஜித் பிலிம்ஸ் தனது மூன்றாவது தயாரிப்புக்கான பணிகளை விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. இந்த புதிய திரைப்படத்திற்கான தயாரிப்பு நிர்வாக மேலாளராக அருண் அருணாச்சலம் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரியாக நிகில் முருகன் ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜா இந்த புதிய படத்திற்கு இசையமைக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே சினிமா வட்டாரத்தில் பெரும் ஆவலையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், முன்னணி ஒளிப்பதிவாளர் மற்றும் திறமையான கலைஞர்கள் பலரும் இந்த திரைப்படத்தில் ஒன்றிணைந்து பணியாற்ற ஒப்பந்தமாகி வருகின்றனர். பாலு மகேந்திரா பாசறையில் பயிற்சி பெற்ற பல திறமையாளர்கள் இந்த படைப்பில் கைகோர்க்கின்றனர். அபராஜித் பிலிம்ஸ் நிறுவனத்தின் இந்த பிரம்மாண்ட படைப்பு குறித்த கூடுதல் விவரங்கள், படத்தின் நட்சத்திரப் பட்டாளம் மற்றும் படத்தின் தலைப்பு ஆகியவை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
· Nikil Murukan