நந்தா, மௌனம் பேசியதே தயாரிப்பாளர்களின் 3-வது படம்: இசைஞானி இளையராஜா இசையில் புதிய தொடக்கம்

நந்தா, மௌனம் பேசியதே தயாரிப்பாளர்களின் 3-வது படம்: இசைஞானி இளையராஜா இசையில் புதிய தொடக்கம்

தமிழில் நந்தா மற்றும் மௌனம் பேசியதே ஆகிய இரு வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த அபராஜித் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கணேஷ் ரகு, தங்களது மூன்றாவது திரைப்படத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த புதிய திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை பிரபல படத்தொகுப்பாளர் ராம் ராவ் இயக்குகிறார். சூர்யாவின் நடிப்பில் பாலா இயக்கிய நந்தா மற்றும் அமீர் இயக்கிய மௌனம் பேசியதே ஆகிய படங்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த படைப்புகளாக விளங்குகின்றன. அந்தப் படங்களைத் தயாரித்த புகழ்பெற்ற நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் புதிய படத்தைத் தயாரிப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இளையராஜாவின் இசை மற்றும் ராம் ராவின் இயக்கம் இணையும் இப்புதிய திரைப்படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் படப்பிடிப்பு தேதிகள் குறித்த கூடுதல் விவரங்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் தொடக்க விழா அறிவிப்புகளும் வெளிவரவுள்ளன.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்