அப்பாக்குட்டி படத்தின் தந்தை பாசப் பாடல்: விஜய் ஆண்டனி இசையில் நீதானே என் கண்ணாடி திங்கள் ரிலீஸ்!

அப்பாக்குட்டி படத்தின் தந்தை பாசப் பாடல்: விஜய் ஆண்டனி இசையில் நீதானே என் கண்ணாடி திங்கள் ரிலீஸ்!

விஜய் ஆண்டனி இசையமைத்து கதாநாயகனாக நடித்துள்ள அப்பாக்குட்டி திரைப்படத்திலிருந்து, தந்தை மற்றும் மகளுக்கு இடையிலான உன்னத பாசத்தை விவரிக்கும் நீதானே என் கண்ணாடி என்ற பாடல் வரும் திங்கள்கிழமை வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு அப்டேட்டை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மு. மாறன் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், ஆக்ஷன் மற்றும் குடும்ப பாசப் பின்னணியைக் கொண்ட திரில்லராக செதுக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் ஆண்டனியே இப்படத்திற்கு சொந்தமாக இசையமைத்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தந்தை பாசத்தை மையமாகக் கொண்ட மெலடி பாடலாக இது அமையவுள்ளது. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் தயாராகியுள்ள அப்பாக்குட்டி திரைப்படம் வரும் நவம்பர் 20 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அடுத்தடுத்து வெளியாகும் பாடல்களும் காட்சிகளும் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன.

· Only Kollywood

பழைய செய்திகள்