ராமாயணா பிரம்மாண்ட டிரெய்லர் வெளியீடு: பெங்களூரு வந்தார் ஏ.ஆர். ரஹ்மான்
இந்திய சினிமாவின் பெருமைமிகு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'ராமாயணா' திரைப்படத்தின் சர்வதேச டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்காக பெங்களூரு வந்தடைந்துள்ளார் என்ற ருசிகர தகவலை மக்கள் தொடர்பாளர் வம்சி சேகர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ராமாயணா' திரைப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சர்வதேச தரத்திலான தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து உருவாகும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் மிக விமரிசையாக நடைபெறுகிறது. விழா மேடையில் ரஹ்மானின் வருகை ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அவரது ஆன்மீகமும் பிரம்மாண்டமும் கலந்த இசை ரசிகர்களுக்கு புதுவித உணர்வைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து விதமான பிரீமியம் திரையரங்கு வடிவங்களிலும் வரும் நவம்பர் 5 ஆம் தேதி உலகளவில் 'ராமாயணா' திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த சர்வதேச டிரெய்லர் வெளியீட்டு விழாவுடன் படத்தின் அதிகாரப்பூர்வ உலகளாவிய விளம்பரப் பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளன.
· Ursvamsishekar