மழைக்காலத்திற்கு இதமான ஏ.ஆர்.ரஹ்மானின் 'நன்னாரே': இன்றைய பாடலாகப் பரிந்துரை

மழைக்காலத்திற்கு இதமான ஏ.ஆர்.ரஹ்மானின் 'நன்னாரே': இன்றைய பாடலாகப் பரிந்துரை

மழை பொழியும் இனிய காலநிலைக்கு ஏற்ற பாடலாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான எவர்கிரீன் பாடலான 'நன்னாரே'வை சோனி மியூசிக் சவுத் இன்றைய சிறந்த பாடலாகத் தேர்ந்தெடுத்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'குரு' திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் இன்றும் கேட்போரை மயக்கும் ஆற்றல் கொண்டது. ஷ்ரேயா கோஷலின் மாயாஜாலக் குரலிலும், ஐஸ்வர்யா ராயின் வசீகரமான நடனத்திலும் மழையின் சிலிர்ப்பை அச்சு அசல் அப்படியே ரசிகர்களுக்குக் கடத்திய பாடல் இது. ஏ.ஆர்.ரஹ்மானின் பாரம்பரியமும் நவீனமும் கலந்த இசை கோர்ப்பு இப்பாடலை என்றும் பசுமையான ஒன்றாக நிலைநிறுத்தியுள்ளது. மழைத்துளிகள் விழும் மாலைப் பொழுதுகளில் தேநீருடன் ரசிக்கத் தகுந்த இந்த அற்புதமான கிளாசிக் பாடலை மீண்டும் கேட்டு மகிழுமாறு இசைப் பிரியர்களுக்கு சோனி மியூசிக் அழைப்பு விடுத்துள்ளது.

· Sony Music South

பழைய செய்திகள்