ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘ராமாயணா’: மங்கள வண்ணமே தமிழ் பாடல் வெளியானது!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘ராமாயணா’: மங்கள வண்ணமே தமிழ் பாடல் வெளியானது!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘மங்கள வண்ணமே’ பாடல் தற்போது தமிழில் வெளியாகியுள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் உலகப் புகழ்பெற்ற ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ள இந்த மனதை உருக்கும் பாடல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. நமித் மல்ஹோத்ரா மற்றும் ராக்கிங் ஸ்டார் யாஷ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். சன்னி தியோல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். ராமன் மற்றும் சீதையின் மங்களகரமான திருக்கல்யாண நிகழ்வை விவரிக்கும் வகையில் அமைந்துள்ள ‘மங்கள வண்ணமே’ பாடலின் வரிகளும் இசையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இத்திரைப்படம் வரும் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் பான் இந்தியா திரைப்படமாக ஐமாக்ஸ் திரைகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களிடையே இப்பாடல் தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்