சூரிக்கு ரஜினி படத்தில் வாய்ப்பு வந்தபோது வெற்றிமாறன் செய்த செயல்: தாணு நெகிழ்ச்சி!
'அரசன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் திரைக்குப் பின்னால் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பகிர்ந்துள்ளார். பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பிற்குப் பிறகு, இயக்குநர் வெற்றிமாறன் 'ராஜன் வகையறா' பணிகளுக்காகச் சிறிய இடைவெளி எடுப்பார் என்றும், முழு அர்ப்பணிப்புடன் படப்பிடிப்பை முடித்தவுடன் எடிட்டிங் பணிகளில் ஈடுபடுவார் என்றும் தெரிவித்தார். கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்பு தடைபட்டபோது, விஜய் சேதுபதி ஐந்து மொழிகளில் நடித்துக் கொண்டிருந்த நிலையிலும், தனக்கு ஓய்வு கிடைக்கும் நாட்களை இந்த படத்திற்காக ஒதுக்கித் தந்து ஒத்துழைத்ததை தாணு நினைவுகூர்ந்தார். அதேபோல் நடிகர் சூரிக்கு ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது, இதுபோன்ற பெரிய வாய்ப்புகளைத் தவறவிடக் கூடாது என வெற்றிமாறனே ஊக்கமளித்து அனுப்பி வைத்ததாகவும், அதனால் நான்கு மாதங்கள் சூரி அண்ணாத்த படப்பிடிப்பில் கவனம் செலுத்தியதாகவும் தாணு நெகிழ்ச்சியுடன் கூறினார்.
· @_movietamil