யூடியூபில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள்: அரிகொம்பன் பட டீசருக்கு அமோக வரவேற்பு!
இயக்குநர் மிதுன் மகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அரிகொம்பன்' தமிழ் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி, யூடியூப் தளத்தில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. காட்டு யானை அரிகொம்பனின் பின்னணியை மையமாகக் கொண்டு உருவான இந்த டீசரின் வெற்றியை படக்குழு சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளது. இயற்கையும் மனிதர்களும் எதிர்கொள்ளும் முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட விறுவிறுப்பான கதைகளத்தோடு இத்திரைப்படம் உருவாகியுள்ளது. டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகளும், விறுவிறுப்பான பின்னணி இசையும் சினிமா ஆர்வலர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. திரையரங்க வெளியீட்டிற்கு முன்பே கிடைத்துள்ள இந்த அபார வரவேற்பு படக்குழுவினருக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள அரிகொம்பன் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. திரையரங்குகளில் ஒரு புதுமையான சினிமா அனுபவத்தைத் தரும் நோக்கில் தயாராகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Actor Kayal Devaraj