உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான 'அரிக்கொம்பன்': மிரட்டலான டீசர் வெளியீடு!

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான 'அரிக்கொம்பன்': மிரட்டலான டீசர் வெளியீடு!

கேரளா மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காட்டு யானை அரிக்கொம்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் அரிக்கொம்பன். இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான மோதலை காட்டும் இப்படத்தின் விறுவிறுப்பான அதிகாரப்பூர்வ டீசர் தற்போது வெளியாகியுள்ளது. மிதுன் மகேஸ்வரன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள இப்படத்தில், அடர்ந்த வனப்பகுதிகளின் அழகும், காட்டு யானையின் ஆக்ரோஷமும் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மனிதர்களின் பேராசைக்கும் வனவிலங்குகளின் வாழ்வாதார உரிமைக்கும் இடையிலான போராட்டத்தை தீவிரமான சினிமா அனுபவமாக படக்குழு உருவாக்கியுள்ளது டீசரில் வெளிப்படுகிறது. அனீஷ் லால் ஒளிப்பதிவும் பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பும் காட்சிகளுக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளன. திரைப்பட ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ள அரிக்கொம்பன் திரைப்படம் வரும் டிசம்பர் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. காடு சார்ந்த படங்களை விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு இது சிறந்த விருந்தாக இருக்கும்.

· Idiamondbabu

பழைய செய்திகள்