காட்டு யானையின் உண்மைக்கதை 'அரிகொம்பன்': நாளை டீசரை வெளியிடுகிறார் சசிகுமார்!
கேரள மற்றும் தமிழக வன எல்லைகளில் பெரும் பரபரப்பையும் மக்கள் கவனத்தையும் ஈர்த்த காட்டு யானையான அரிகொம்பனின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'அரிகொம்பன்'. அடர்ந்த இயற்கை சூழல், வனவிலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு இடையேயான உணர்வுபூர்வமான மோதலைப் பேசும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த விறுவிறுப்பான டீசரை பிரபல நடிகரும் சிறந்த இயக்குநருமான சசிகுமார் தனது சமூக வலைதள பக்கங்கள் வாயிலாக அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளார். மிதுன், சகிஷ்னா, தேவிகா கிருஷ்ணன் மற்றும் இயக்குநர் எஸ். சிவா கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களைக் காடுகளின் ஆழமான நிலப்பரப்பிற்கு நேரடியாக அழைத்துச் செல்லும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் விறுவிறுப்பான திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட படைப்பு வரும் டிசம்பர் 11, 2026 அன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் தற்போது உறுதி செய்துள்ளனர்.
· Actor Kayal Devaraj