யார் இந்த ஜான் டோ?: அர்ஜுன் தாஸின் மர்மங்கள் நிறைந்த புதிய கதாபாத்திர வீடியோ வெளியீடு!
அர்ஜுன் தாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் 'ஜான் டோ' திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை சுவாரசியமாக அறிமுகம் செய்து வைக்கும் பிரத்யேக வீடியோ இணையத்தில் வெளியாகி சினிமா பிரியர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. 'கே.டி. என்கிற கருப்புதுரை' திரைப்படத்தை இயக்கி தேசிய அளவில் கவனம் ஈர்த்த மதுமிதா இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். பாகுபலி புகழ் ஆர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஏஜிஎஸ் சினிமாஸ் வழங்கும் இப்படத்தில் சஞ்சனா, ஸ்ரீஷ் சிங், அனுபமா குமார் என பல திறமையான நடிகர்கள் நடித்துள்ளனர். ஒவ்வொரு பாத்திரமும் மர்மத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டிருப்பது வீடியோவில் தெரிகிறது. 'யார் இந்த ஜான் டோ?' என்ற சுவாரசியமான கேள்வியோடு தொடங்கும் இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம் வரும் நவம்பர் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அர்ஜுன் தாஸின் வசீகரமான கம்பீரக் குரலும் தீவிரமான நடிப்பும் இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Actor Kayal Devaraj