அர்ஜுன் தாஸின் ஜான் டோ: 'நான் போதுமா' முதல் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது

அர்ஜுன் தாஸின் ஜான் டோ: 'நான் போதுமா' முதல் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது

அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் புதுமையான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான 'ஜான் டோ' படத்தின் முதல் பாடலான 'நான் போதுமா' லிரிக்கல் வீடியோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது என்று நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இப்பாடலில் அர்ஜுன் தாஸ் தனது தனித்துவமான கம்பீர குரலில் ராப் வரிகளைப் பாடியுள்ளார், அவருடன் இணைந்து மாளவிகா இனிமையான பெண் குரலில் பாடியுள்ளார். இப்பாடலுக்கு த ஆர்ட்டிஸ்ட் 404 இசையமைத்துள்ளார். மனித மனதின் உள்ளே எழும் சந்தேகங்களையும் கேள்விகளையும் தனக்குள்ளேயே பேசிக்கொள்ளும் உணர்வுகளையும் மையமாகக் கொண்டு இப்பாடலின் வரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மதுமிதா எழுதி இயக்கியுள்ள இப்படத்தை பாகுபலி புகழ் ஆர்கா மீடியா வொர்க்ஸ் சார்பில் பிரசாத் தேவினேனி மற்றும் சோபு யார்லகட்டா இணைந்து தயாரித்துள்ளனர். ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் வழங்கும் இத்திரைப்படம் வரும் நவம்பர் மாதம் திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தின் முதல் பாடலின் அறிவிப்பு அர்ஜுன் தாஸ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்