அர்ஜுன் தாஸின் 'ஜான் டோ' மர்ம டிரெய்லர் வெளியானது: நவம்பர் 13 திரையரங்குகளில் ரிலீஸ்!

அர்ஜுன் தாஸின் 'ஜான் டோ' மர்ம டிரெய்லர் வெளியானது: நவம்பர் 13 திரையரங்குகளில் ரிலீஸ்!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமான 'ஜான் டோ' படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி இணையத்தில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. யார் இந்த ஜான் டோ என்ற கேள்வியோடு தொடங்கும் இந்த டிரெய்லரை மக்கள் தொடர்பாளர் டயமண்ட் பாபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படத்தை மதுமிதா எழுதி இயக்கியுள்ளார். பாகுபலி படங்களைத் தயாரித்த பிரபல ஆர்கா மீடியா வொர்க்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏஜிஎஸ் சினிமாஸ் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தை வழங்குகிறார். சஞ்சனா நடராஜன், சஞ்சனா சிங் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கட்டுகடங்காத மர்மங்களும் திருப்பங்களும் நிறைந்த இந்த புலனாய்வு திரில்லர் திரைப்படம் வரும் நவம்பர் 13 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அர்ஜுன் தாஸின் கம்பீரமான குரலும் டிரெய்லரின் விறுவிறுப்பான பின்னணி இசையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

· Idiamondbabu

பழைய செய்திகள்