பாகுபலி தயாரிப்பு நிறுவனத்தின் தமிழ் என்ட்ரி: அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு நாளை!
'பாகுபலி', 'வேதம்' மற்றும் 'மரியாத ராமண்ணா' போன்ற வரலாற்று வெற்றிப் படங்களைத் தயாரித்த புகழ்பெற்ற அர்கா மீடியா ஒர்க்ஸ் (Arka Media Works) நிறுவனம், தங்களது 9-வது தயாரிப்பின் மூலம் நேரடியாகத் தமிழ் சினிமாவில் தடம் பதிக்கிறது. நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் தலைப்பு நாளை மாலை 6 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. விருது பெற்ற 'கே.டி (எ) கருப்புதுரை' திரைப்படத்தை இயக்கி பாராட்டைப் பெற்ற இயக்குநர் மதுமிதா இப்படத்தின் கதையை எழுதி இயக்குகிறார். ஷோபு யார்லகட்டா மற்றும் பிரசாத் தேவினேனி தயாரிக்கும் இப்படத்தில் அர்ஜுன் தாஸுடன் சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலரும் இணைந்து நடிக்கின்றனர். இயக்குநர் மதுமிதாவின் யதார்த்தமான இயக்கமும், அர்ஜுன் தாஸின் கம்பீரமான குரலும், அர்கா மீடியா நிறுவனத்தின் உயர்தர தயாரிப்பும் இணையும் இந்த புதிய கூட்டணி தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
· Actor Kayal Devaraj