அர்கா புரொடக்ஷன்ஸின் புதிய படம்: இயக்குநர் மதுமிதாவின் அடுத்த படைப்பு தலைப்பு நாளை மாலை அறிவிப்பு!

அர்கா புரொடக்ஷன்ஸின் புதிய படம்: இயக்குநர் மதுமிதாவின் அடுத்த படைப்பு தலைப்பு நாளை மாலை அறிவிப்பு!

பாகுபலி போன்ற பிரம்மாண்ட வெற்றிப் படங்களைத் தயாரித்த புகழ்பெற்ற அர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரிக்கும் புதிய படத்தின் தலைப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. அர்கா புரொடக்ஷன்ஸின் 9வது தயாரிப்பாக உருவாகும் இந்த படத்தை பிரபல இயக்குநர் மதுமிதா எழுதி இயக்குகிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. கே.டி என்கிற கருப்புதுரை போன்ற உணர்வுப்பூர்வமான மற்றும் பாராட்டப்பட்ட திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்தவர் மதுமிதா. மனித உணர்வுகளையும் இயல்பான நகைச்சுவையையும் தனது படங்களில் அழகாகக் காட்சிப்படுத்தும் மதுமிதா, இம்முறை முன்னணி தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்திருப்பது சினிமா ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரங்களும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன. நாளை மாலை 6 மணிக்கு படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ள நிலையில், இது எந்த மாதிரியான கதைக்களத்தைக் கொண்டிருக்கும் என்பது குறித்த விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் இப்போதே தொடங்கிவிட்டன.

· @_movietamil

பழைய செய்திகள்