அருள்நிதி மற்றும் அமீர் நடிக்கும் வெட்டசாமி: டிசம்பரில் திரையரங்குகளில் ரிலீஸ்
வித்தியாசமான மற்றும் பரபரப்பான த்ரில்லர் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் தனி முத்திரை பதித்த நடிகர் அருள்நிதி மற்றும் பிரபல இயக்குநர் நடிகர் அமீர் இணைந்து நடித்துள்ள 'வெட்டசாமி' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குநர் எம்.எஸ். குமார் இயக்கியுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் போஸ்டர் தற்போது வெளியாகி சினிமா வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. 'சட்டத்திலிருந்து தப்பு... இறைவனை எதிர்கொள்' என்ற அழுத்தமான வாசகத்தோடு வெளியாகியுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராமிய பின்னணியில் விறுவிறுப்பான ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மேலும் ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவு மற்றும் அந்தோணி ரூபனின் படத்தொகுப்பு இப்படத்தின் முக்கிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அருள்நிதியின் த்ரில்லர் திரைப்படங்கள் எப்போதுமே ரசிகர்களுக்கு ஒரு சுவாரசியமான சினிமா அனுபவத்தைத் தரும். அதேபோல் கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தும் அமீரும் இணைந்துள்ளதால், இந்த டிசம்பர் மாத சினிமா போட்டியில் 'வெட்டசாமி' முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
· Actor Kayal Devaraj