அருள்நிதி, அமீர் இணையும் வேட்டசாமி: தமிழக திரையரங்கு உரிமத்தைக் கைப்பற்றிய ஜிஎம் பிக்சர்ஸ்
அருள்நிதி மற்றும் இயக்குநர் அமீர் இணைந்து நடித்துள்ள 'வேட்டசாமி' திரைப்படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை ஜிஎம் பிக்சர்ஸ் அண்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முறைப்படி கைப்பற்றியுள்ளது. இந்த தகவலை படக்குழு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. எம்.எஸ். குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லர் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மேலும் ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எல். ரூபன் படத்தொகுப்பு பணிகளைக் கவனித்துள்ளார். "சட்டத்திலிருந்து தப்பு, கடவுளை எதிர்கொள்" என்ற அழுத்தமான வாசகத்தோடு வெளியாகி இருக்கும் போஸ்டர் திரையுலக வட்டாரத்தில் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. வித்தியாசமான கதைக் களங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் அருள்நிதியுடன், தேர்ந்த படைப்பாளியான அமீர் கைகோர்த்திருப்பது படத்திற்கு தனி பலம் சேர்த்துள்ளது. தமிழக உரிமம் முடிவாகிவிட்ட சூழலில், படத்தின் டீசர் மற்றும் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
· Actor Kayal Devaraj