அருள்நிதியின் 'வேட்டசாமி': முதல் பாடலான 'சாமி அழைப்பு' 1 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை!

அருள்நிதியின் 'வேட்டசாமி': முதல் பாடலான 'சாமி அழைப்பு' 1 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை!

அருள்நிதி மற்றும் இயக்குனர் அமீர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் அதிரடித் திரைப்படமான 'வேட்டசாமி' படத்தின் முதல் பாடல் 'சாமி அழைப்பு' யூடியூபில் 10 லட்சம் பார்வைகளைக் கடந்து இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இப்படத்தின் மாஸ் எனர்ஜி நிறைந்த இப்பாடல் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. எம்.எஸ். குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மாதவி வில்லிசை மற்றும் ஜெகன் கவிராஜ் வரிகளில் நாட்டுப்புறக் கலையோடு கூடிய பக்தி மற்றும் ஆக்‌ஷன் கலந்த துள்ளல் இசையாக இப்பாடல் வெளியாகி யூடியூபில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 'சட்டத்திலிருந்து தப்பிக்கலாம், சாமியிடமிருந்து தப்ப முடியாது' என்ற அதிரடி வாசகத்துடன் உருவாகும் 'வேட்டசாமி' படத்தின் அடுத்தடுத்த சிங்கிள்கள் மற்றும் டீசர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான 7 எம்பிஎஸ் புரொடக்ஷன்ஸ் தெரிவித்துள்ளது. அருள்நிதியின் தீவிரமான நடிப்பு இப்படத்தில் புதுவித அனுபவத்தைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

· Idiamondbabu

பழைய செய்திகள்