ராமாயணம் படத்தில் தசரத சக்கரவர்த்தியாக அருண் கோவில்: தீபாவளி 2026 ரிலீஸ்

ராமாயணம் படத்தில் தசரத சக்கரவர்த்தியாக அருண் கோவில்: தீபாவளி 2026 ரிலீஸ்

இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராமாயணம் திரைப்படத்தில் அயோத்தி மன்னர் தசரத சக்கரவர்த்தியாக பிரபல மூத்த நடிகர் அருண் கோவில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராமநந்த் சாகரின் இதிகாசத் தொலைக்காட்சித் தொடரில் ராமனாக நடித்து மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பிடித்தவர் அருண் கோவில் என்பது குறிப்பிடத்தக்கது. நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகும் இம்மாபெரும் படத்தில் ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி சீதையாகவும், கே.ஜி.எஃப் நாயகன் யஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். மேலும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் உலகப் புகழ்பெற்ற ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து படத்திற்கு இசையமைக்கின்றனர். இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த பிரம்மாண்ட இதிகாசப் படைப்பு வரும் 2026 ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. ராமாயண இதிகாசம் நவீன தொழில்நுட்பத்துடன் திரையில் எவ்வாறு வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல முன்னணி நட்சத்திரங்கள் இணையும் இப்படம் இந்திய சினிமாவின் பெருமைமிகு படைப்பாக உருவாகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்