ஆர்யாவின் 40-வது படம்: இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் மாஸ் டைட்டில் டீசர்!
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான ஆர்யா நடிக்கும் 40-வது படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த டீசர் வெளியிடப்படுவதாக நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். 'ஆர்யா 40' குறித்த இந்த அறிவிப்பு ஆர்யாவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சில்வர் கிரைன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கர் கேமரா பணிகளைக் கவனிக்க, இயக்குநர் ஹலிதா ஷமீமும் இக்குழுவில் கைகோர்த்துள்ளது திரை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான கதையம்சத்துடன் உருவாகும் படமாக இது இருக்கும் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கடைசியாக வெளியான படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஆர்யா, தனது 40-வது திரைப்படத்தில் எந்த மாதிரியான லுக்கில் வரப்போகிறார் என்ற ஆர்வம் எழுந்துள்ளது. இன்று மாலை வெளியாகும் டைட்டில் டீசரில் படத்தின் பெயரோடு மற்ற முக்கிய நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களும் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
· Actor Kayal Devaraj