அமேசான் பிரைமில் ட்ரெண்டிங்கில் ஆர்யாவின் 'அனந்தன் காடு': தமிழ் உட்பட 4 மொழிகளில் வெளியீடு!

அமேசான் பிரைமில் ட்ரெண்டிங்கில் ஆர்யாவின் 'அனந்தன் காடு': தமிழ் உட்பட 4 மொழிகளில் வெளியீடு!

நடிகர் ஆர்யா நடிப்பில் காட்டின் பின்னணியில் த்ரில்லர் பாணியில் உருவான 'அனந்தன் காடு' திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த காடுகளுக்குள் நடக்கும் சுவாரசியமான சாகசப் பயணத்தை மையமாகக் கொண்ட இப்படம், அமேசான் பிரைமில் ட்ராமா திரைப்படங்கள் வரிசையில் எட்டாவது இடத்தைப்பிடித்து ட்ரெண்டாகி வருகிறது. கோகுலம் மூவிஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. ஆர்யாவின் மாறுபட்ட தோற்றமும் விறுவிறுப்பான கதைக்களமும் ஓடிடி பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. வீக் எண்ட் விடுமுறைக்கு குடும்பத்துடன் பார்க்கத் தகுந்த விறுவிறுப்பான படமாக இது அமைந்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

· Apifilms

பழைய செய்திகள்