ஆர்யாவின் 'ஹலோ காதல்' படத்திலிருந்து இரண்டாவது பாடல்: ஜி.வி.பிரகாஷ் இசையில் 'நிறைவே' நாளை மாலை வெளியீடு!
நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் ரொமான்டிக் திரைப்படமான 'ஹலோ காதல்' படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான 'நிறைவே' நாளை மாலை 5 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. அழகான காதல் மெல்லிசையாக உருவாகியுள்ள இந்த பாடலின் அறிவிப்பு போஸ்டரை படக்குழுவினர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடல், காதலர்களின் இதயங்களை வருடும் இனிமையான பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெளியான முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகுள்ள இந்த இரண்டாவது பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. ஆர்யாவின் வசீகரமான ரொமான்டிக் தோற்றம் போஸ்டரில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இயக்குநர் ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்துள்ள 'ஹலோ காதல்' திரைப்படம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. காதல் மற்றும் குடும்ப உறவுகளின் மேன்மையைச் சொல்லும் இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
· Actor Kayal Devaraj