திரையரங்குகளில் வெற்றிகரமாக 2-வது வாரத்தில் அசோக் செல்வனின் 'அன்பில் அவன்'!
அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியாகியுள்ள 'அன்பில் அவன்' திரைப்படம் இரண்டாவது வார இறுதியிலும் வசூல் வேட்டையைத் தொடர்ந்து பிளாக்பஸ்டர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளார். கார்த்திக் கேன் இயக்கத்தில் ஐங்கரன் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் இணைந்து தயாரித்த இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இதயத்தைத் தொடும் காதல் உணர்வுகளும், குடும்பப் பாங்கான எதார்த்தக் காட்சிகளும் இளைஞர்கள் முதல் குடும்ப ரசிகர்கள் வரை அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளன. இரண்டாவது வாரத்திலும் திரையரங்குகளில் குடும்பங்கள் குடும்பமாக வந்து படத்தைக் கொண்டாடி வருகின்றனர். மக்களின் பேராதரவைப் பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'அன்பில் அவன்', திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
· Actor Kayal Devaraj