3வது வாரத்தில் வெற்றி நடை போடும் அன்பிலவன்: அசோக் செல்வன் படத்திற்கு தொடரும் ஆதரவு

3வது வாரத்தில் வெற்றி நடை போடும் அன்பிலவன்: அசோக் செல்வன் படத்திற்கு தொடரும் ஆதரவு

அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியான 'அன்பிலவன்' திரைப்படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளது. திரையரங்குகளில் படம் தொடர்ந்து ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஓடிக் கொண்டிருப்பதாக நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் போஸ்டருடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். கார்த்தி கேன் இயக்கத்தில் உருவான இந்த காதல் கலந்த அதிரடி த்ரில்லர் திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் ஜோடியின் இயல்பான கெமிஸ்ட்ரியும், பீட்டர் ஹெய்ன் அமைத்த சண்டைக் காட்சிகளும் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. வார இறுதி நாட்களில் குடும்பங்கள் மற்றும் இளைஞர்களின் வருகையால் திரையரங்குகள் களைகட்டி வருகின்றன. ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான அன்பிலவன், போட்டி நிறைந்த திரையரங்கு சூழலிலும் வசூலைத் தக்கவைத்து நல்ல வரவேற்பைப் பெற்று வருவது படக்குழுவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்