முதல் பாதி மேக்கிங் அருமை: அசோக் செல்வனின் அன்பில் அவன் நாளை ரிலீஸ்!

முதல் பாதி மேக்கிங் அருமை: அசோக் செல்வனின் அன்பில் அவன் நாளை ரிலீஸ்!

அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் அன்பில் அவன். கார்த்தி கேன் இயக்கத்தில் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முதல் பாதியைப் பார்த்த சினிமா வட்டாரத்தினர் படம் குறித்து பாராட்டிப் பதிவிட்டுள்ளனர். படத்தில் காதலும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சிகளை அமைத்துள்ளார். ஹேப்பி ஹை பிக்சர்ஸ் மற்றும் அய்ங்கரன் இன்டர்நேஷனல் இணைந்து வழங்கும் இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. சிறந்த காதல் மற்றும் குடும்பப் படங்களை வழங்கி வரும் அசோக் செல்வனின் இந்த புதிய முயற்சி ரசிகர்களைக் கவருமா என்பது நாளை தெரிந்துவிடும்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்