அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’: முன்பதிவு துவங்கியது, நாளை திரையரங்குகளில் உற்சாக ரிலீஸ்!

அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’: முன்பதிவு துவங்கியது, நாளை திரையரங்குகளில் உற்சாக ரிலீஸ்!

அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள அழகான காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகிறது. கார்த்தி கேன் இயக்கத்தில், கோவிந்த் வசந்தாவின் மயக்கும் மெல்லிசை உருவாக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தை அயங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹாப்பி ஹை பிக்சர்ஸ் இணைந்து வழங்குகின்றன. பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சிகளை அமைத்துள்ளார். அழகான காதலும், குடும்ப உணர்வுகளும் சரிவிகிதத்தில் கலந்த ஒரு இனிமையான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் பாடல்களும் முன்னோட்டக் காட்சிகளும் இளசுகளின் மனதை வெகுவாகக் கவர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் தியேட்டர்களில் டிக்கெட்டுகளை ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர். ஒரு தூய்மையான காதல் கதையை திரையரங்குகளில் கொண்டாடும் வகையில் குடும்ப ரசிகர்களும் திரண்டு வருகின்றனர். நாளை திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை காண ரசிகர்கள் இப்போதே திரையரங்கு வாசல்களில் காத்திருக்கத் தொடங்கியுள்ளனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்