அசோக் செல்வனின் 'அன்பில் அவன்': 50 திரையரங்குகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 2வது வாரம்!
அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 'அன்பில் அவன்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. படம் பார்த்த ரசிகர்களிடமிருந்து கிடைத்த நேர்மறையான விமர்சனங்களைத் தொடர்ந்து, தமிழகமெங்கும் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகள் கூடுதலாக இப்படத்திற்கு ஒதுக்கப்பட்டு காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக படத்தில் அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் இடையிலான உணர்வுபூர்வமான மோதல் காட்சிகள் பார்வையாளர்களின் மனதை ஆழமாகத் தொட்டு பெரும் பாராட்டைப் பெற்று வருகின்றன. இருவரின் தனிப்பட்ட வாழ்க்கைப் போராட்டங்கள், புரிதலின்மை மற்றும் காதலின் சிக்கல்களை மிக இயல்பாக வெளிப்படுத்திய விதம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. எதார்த்தமான நடிப்பும் இதயத்தைத் தொடும் காட்சிகளும் குடும்ப ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. மக்களின் நேரடி பாராட்டு காரணமாக வார நாட்களிலும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் இரண்டாவது வாரத்திலும் அன்பில் அவன் திரைப்படத்தின் வசூல் மேலும் புதிய உச்சங்களைத் தொடும் என திரையரங்க உரிமையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
· Only Kollywood