அசோக் செல்வன் பிறந்தநாள் ஸ்பெஷல்: நாகார்ஜுனாவின் 'கிங் 100' கர்ணா போஸ்டர் வெளியீடு!
நடிகர் அசோக் செல்வனின் பிறந்தநாளை முன்னிட்டு, கிங் நாகார்ஜுனாவின் 100வது திரைப்படமான 'கிங் 100' குழுவினர் அசோக் செல்வனின் புதிய கதாபாத்திர போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் 'கர்ணா' என்ற அதிரடியான மற்றும் எதற்கும் கட்டுப்படாத துடிப்பான கதாபாத்திரத்தில் அசோக் செல்வன் நடிக்கிறார். ரா.கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பிரம்மாண்ட படத்தில் தபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். போஸ்டரில் அசோக் செல்வனின் ரக்கட் தோற்றமும் தீவிரமான பார்வையும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகும் என்று படக்குழு உறுதி செய்துள்ளது. நாகார்ஜுனா மற்றும் அசோக் செல்வன் இணையும் இந்த கூட்டணி திரையில் அனல் பறக்கும் காட்சிகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Only Kollywood