திரையரங்குகளில் காதல் மழை பொழியும் 'அன்பில் அவன்': அசோக் செல்வன் நடித்துள்ள ரொமான்டிக் ஹிட்!
அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியான காதல் திரைப்படமான 'அன்பில் அவன்' திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இளைஞர்கள் மற்றும் காதல் ஜோடிகளை வெகுவாகக் கவர்ந்துள்ள இத்திரைப்படம் குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இயக்குநர் கார்த்திக் கேன் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவான இந்த ரொமான்டிக் டிராமாவில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் இடையிலான காதல் கெமிஸ்ட்ரி ரசிகர்களை ஈர்த்துள்ளது. அயங்காரன் நிறுவனம் மற்றும் ஹாப்பி ஹை பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த ஃபீல் குட் காதல் திரைப்படத்தை தியேட்டர்களில் பெரிய திரையில் கண்டு ரசிக்க திரையுலகினர் பரிந்துரைக்கின்றனர்.
· @kollywoodscope