திருச்சி திரையரங்கில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன்: 'அன்பிலவன்' படக்குழுவிற்கு உற்சாக வரவேற்பு

திருச்சி திரையரங்கில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன்: 'அன்பிலவன்' படக்குழுவிற்கு உற்சாக வரவேற்பு

நடிகர் அசோக் செல்வன் மற்றும் நாயகி ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் திருச்சி எல்ஏ சினிமாஸ் திரையரங்கிற்கு நேரில் சென்று ரசிகர்களுடன் தங்களது 'அன்பிலவன்' திரைப்படத்தைக் கண்டுகளித்தனர். அங்கு கூடியிருந்த திரளான சினிமா ரசிகர்கள் மற்றும் இளைஞர்கள் படக்குழுவினருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். திரையரங்கம் முழுவதும் குடும்ப ரசிகர்களாலும் இளைஞர்களாலும் நிரம்பி வழிந்த நிலையில், படக்குழுவினருடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்து தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். உணர்வுப்பூர்வமான காதல் கதைக் களத்துடன் வெளியான இத்திரைப்படத்திற்கு திரையரங்குகளில் தொடர்ச்சியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படம் பார்த்த ரசிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தனின் எதார்த்த நடிப்பைப் பாராட்டி வருகின்றனர். தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அசோக் செல்வனின் திரைப்பயணத்தில், அன்பிலவன் படத்திற்கு கிடைத்துள்ள இந்த நேரடி மக்களின் வரவேற்பு படக்குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது.

· @tamilcinexpress

பழைய செய்திகள்