நாகார்ஜுனாவின் கிங் 100 படத்தில் வில்லனாக களமிறங்கும் அசோக் செல்வன்: படப்பிடிப்பில் இணைந்தார்!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகரான அக்கினேனி நாகார்ஜுனாவின் 100-வது திரைப்படத்தில் தமிழ் நடிகர் அசோக் செல்வன் வில்லனாக நடிக்கிறார். நாகார்ஜுனா தரப்பில் இருந்து இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சினிமா எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அசோக் செல்வன் ஏற்கனவே இப்படத்திற்கான படப்பிடிப்பில் கலந்துகொண்டு தனது காட்சிகளில் நடித்து வருகிறார். கதாநாயகனாக பல வெற்றிப் படங்களில் நடித்து வரும் அசோக் செல்வன், ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தில் நாகார்ஜுனாவுக்கு எதிராக பவர்புல் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளது தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகார்ஜுனாவின் திரை வாழ்க்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க 100-வது படமாக உருவாகி வரும் இப்படத்தை முன்னணி இயக்குனர் இயக்க, பிரம்மாண்டமான பொருட்செலவில் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
· @xpresscinema