விஜய் டிவியில் அதர்வாவின் இதயம் முரளி: நவம்பர் 8 காலை 11 மணிக்கு உலகத் தொலைக்காட்சி பிரீமியர்!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அதர்வா முரளி நடிப்பில் உருவான இதயம் முரளி திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி பிரீமியர் குறித்த அறிவிப்பை விஜய் தொலைக்காட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. பண்டிகை நாளன்று சின்னத்திரை ரசிகர்களைக் கவரும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. இப்படத்தில் அதர்வா முரளிக்கு ஜோடியாக கயாது லோஹர் நடித்துள்ளார். முழுக்க முழுக்க ரொமான்டிக் மற்றும் காமெடி கலந்த எண்டர்டெய்னராக உருவான இத்திரைப்படம், காதலின் அழகையும் இளமை ததும்பும் தருணங்களையும் சுவாரசியமாகச் சொல்லி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமன் இசையமைப்பில் உருவான பாடல்களும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. இதயம் முரளி திரைப்படம் வரும் நவம்பர் 8 ஆம் தேதி காலை 11 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் சிறப்புத் திரைப்படமாக ஒளிபரப்பாகிறது. தீபாவளி விடுமுறை தினத்தில் இளசுகளுக்கு உற்சாகமூட்டும் காதல் சரவெடியாக இப்படம் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
· Vijaytelevision