நல்லது செய்யற திமிர் எனக்கு இருக்கு: 'பத்தா' வெற்றி விழாவில் தயாரிப்பாளர் அட்லீ உருக்கமான பேச்சு!

நல்லது செய்யற திமிர் எனக்கு இருக்கு: 'பத்தா' வெற்றி விழாவில் தயாரிப்பாளர் அட்லீ உருக்கமான பேச்சு!

பத்தா திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளரும் முன்னணி இயக்குநருமான அட்லீ, தனது திரையுலகப் பயணம் மற்றும் படம் குறித்து மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். இந்த சுவாரசியமான பேச்சை நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். விழாவில் அட்லீ பேசுகையில், "என்னை சிலர் திமிரானவன் என்று சொல்லலாம். உண்மைதான், நல்லது செய்ய வேண்டும், மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்கிற திமிர் என்னிடம் இருக்கிறது. பாலாஜி எனக்கு பத்தா கதையைச் சொன்ன உடனேயே இது மிகவும் வலிமையான கதை, கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். சொந்தமாக இந்த படத்தை தயாரிக்கும் அளவுக்கு நான் கோடீஸ்வரன் இல்லை, ஆனால் பத்தா போன்ற திரைப்படங்கள் என்னை அந்த உயரத்திற்குக் கொண்டு செல்லும் என நம்புகிறேன். விஜய் சேதுபதி அண்ணனிடம் ஒரு சகோதரராகவும் நடிகராகவும் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்" என்று தெரிவித்தார். மேலும் இசையமைப்பாளர் சாய் அபியங்கரின் இசையைக் கேட்டு லண்டன் அபே ரோடு இசைக்கலைஞர்களே கைதட்டிப் பாராட்டியதாகக் குறிப்பிட்ட அட்லீ, எதிர்காலத்தில் கமல்ஹாசனும் விஜய் சேதுபதியும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்