பார்வையாளர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெறும் 'லா அண்ட் ஆர்டர்' திரைப்படம்!

பார்வையாளர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெறும் 'லா அண்ட் ஆர்டர்' திரைப்படம்!

திரையரங்குகளில் புதிதாக வெளியாகியுள்ள க்ரைம் புலனாய்வுத் திரைப்படமான 'லா அண்ட் ஆர்டர்', ரசிகர்களிடையே மிகப்பெரிய பாராட்டைப் பெற்று வருவதாக ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அபிராமி மற்றும் சித்திக் முன்னணி வேடங்களில் நடித்துள்ள இப்படத்தை பிரகாஷ் வர்மா இயக்கியுள்ளார். விறுவிறுப்பான கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஒரு சிக்கலான கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறையின் அணுகுமுறையும், அதையொட்டி நடக்கும் பரபரப்பான திருப்பங்களும் ரசிகர்களுக்கு திரையரங்கில் நல்ல திரில்லர் அனுபவத்தைக் கொடுத்துள்ளன. திரையரங்குகளில் படம் பார்த்த பலரும் சமூக ஊடகங்களில் நேர்மறையான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். தரமான கதையம்சம் கொண்ட புலனாய்வு படங்களுக்கு ரசிகர்கள் எப்போதுமே பேராதரவு தருவார்கள் என்பதை 'லா அண்ட் ஆர்டர்' திரைப்படம் மீண்டும் நிரூபித்துள்ளது. திரையரங்குகளில் கூட்டமும் ஆதரவும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக படக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

· Apifilms

பழைய செய்திகள்