பார்வையாளர்களின் இதயங்களைத் தொட்ட ஹைகூ: திரையரங்குகளில் நெகிழ்ச்சியான வரவேற்பு

பார்வையாளர்களின் இதயங்களைத் தொட்ட ஹைகூ: திரையரங்குகளில் நெகிழ்ச்சியான வரவேற்பு

திரையரங்குகளில் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஹைகூ திரைப்படத்தைப் பார்த்த சினிமா ரசிகர்கள் தங்களின் நெகிழ்ச்சியான அனுபவங்களை திரையரங்க வளாகங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நெகிழ்ச்சியான தருணங்கள் அடங்கிய வீடியோவை மக்கள் தொடர்பாளர் டயமண்ட் பாபு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் மற்றும் அதிர்ச்சி அருண் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள இந்த திரைப்படத்தை இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இயக்கியுள்ளார். சித்து குமாரின் மனதை வருடும் பின்னணி இசையும், பிரியேஷின் நேர்த்தியான ஒளிப்பதிவும் படத்தின் உணர்ச்சிகரமான காட்சிகளை ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிய வைத்துள்ளன. திரையரங்குகளில் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் குடும்பங்கள் மற்றும் இளசுகள், இந்த கதை தங்களின் சொந்த வாழ்க்கையோடு மிகவும் நெருக்கமாகப் பொருந்திப் போவதாகக் கூறி பாராட்டி வருகின்றனர். இதன் காரணமாக திரையரங்குகளில் படத்திற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

· Idiamondbabu

பழைய செய்திகள்