திரையரங்குகளில் விசில்களும் கைத்தட்டல்களும்: 'சிக்மா' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிரடி வரவேற்பு!
இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ள 'சிக்மா' திரைப்படத்திற்கு திரையரங்குகளில் ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பை அளித்து வருவதாக எக்ஸ் தளத்தில் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. படத்தின் விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளும் தமனின் அதிர வைக்கும் பின்னணி இசையும் திரையரங்குகளில் பார்வையாளர்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. திரையரங்குக்குள் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி விசில் அடித்து உற்சாக ஆரவாரம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து தீவிரமாகப் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஆக்ஷன் எபிசோடுகளுக்கு பலத்த ஆதரவு கிடைத்துள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள இப்படம் கமர்ஷியல் ஆக்ஷன் பிரியர்களுக்கு ஒரு சிறந்த விருந்தாக அமைந்துள்ளது. வார இறுதி நாட்களில் இளைஞர்கள் மற்றும் குடும்ப ஆடியன்ஸின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் பல திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
· Ursvamsishekar