200க்கும் மேற்பட்ட திரைகளில் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கும் அவரச்சன் அண்ட் சன்ஸ்!

200க்கும் மேற்பட்ட திரைகளில் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கும் அவரச்சன் அண்ட் சன்ஸ்!

மலையாளத் திரையுலகில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ள 'அவரச்சன் அண்ட் சன்ஸ்' திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ளது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைத் தொடர்ந்து, கேரளா முழுவதும் 200க்கும் மேற்பட்ட திரைகளில் இந்த வாரம் படம் தொடர்ந்து திரையிடப்பட்டு வருவதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. குடும்பப் பின்னணியில் அமைந்த கலகலப்பான திரைக்கதையும், சுவாரசியமான கதாபாத்திர அமைப்புகளும் பார்வையாளர்களைப் பெரிதும் ஈர்த்துள்ளன. பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்தத் திரைப்படம், மவுத் டாக் மூலமாக அடுத்தடுத்த நாட்களில் வசூலை மளமளவென உயர்த்தியது. வார இறுதி நாட்களில் பல மையங்களில் குடும்ப ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதால் தியேட்டர்களின் எண்ணிக்கையும் தக்கவைக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக மலையாள சினிமாக்கள் கதையின் வலுவான தன்மையால் திரையரங்குகளில் நீண்ட நாட்கள் தாக்குப்பிடித்து வருவது வழக்கம். அந்த வெற்றிகரமான வரிசையில் இணைந்துள்ள 'அவரச்சன் அண்ட் சன்ஸ்', இரண்டாவது வாரத்திலும் தியேட்டர்களில் நல்ல வசூலை ஈட்டும் என விநியோகஸ்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

· MalayalamReview

பழைய செய்திகள்