சிறந்த விமர்சனங்களை அள்ளிக்குவிக்கும் 'அவராச்சன் அண்ட் சன்ஸ்': ரசிகர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் நெகிழ்ச்சி நன்றி!
லிஸ்டின் ஸ்டீபன் தயாரிப்பில் தம்பி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அவராச்சன் அண்ட் சன்ஸ்' திரைப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து சிறந்த விமர்சனங்கள் குவிந்து வருவதாக ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் நன்றி தெரிவித்து அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டுள்ளது. முழு நீள நகைச்சுவைக் குடும்பத் திரைப்படமாக திரைக்கு வந்துள்ள இப்படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. ஜோசப் விஜீஷ் மற்றும் தம்பி இணைந்து எழுதியுள்ள இப்படத்தில் பிஜு மேனன், ஸ்ரீநாத் பாசி, கணபதி, வினய் போர்ட், ஜானி ஆண்டனி, கிரேஸ் ஆண்டனி மற்றும் பார்வதி பாபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் இடையே நடக்கும் கலகலப்பான உரையாடல்களும், சுவாரசியமான குடும்பக் குழப்பங்களும் தியேட்டரில் சிரிப்பலைகளை ஏற்படுத்துவதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேஜிக் பிரேம்ஸ் பேனரில் மீண்டும் ஒரு வெற்றிகரமான குடும்பத் திரைப்படத்தை தந்துள்ள படக்குழுவினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தின் அடுத்தடுத்த புதிய அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்றும் தயாரிப்புத் தரப்பு அறிவித்துள்ளது.
· Apifilms