இந்தியா முழுவதும் திரையரங்குகளில் அவராச்சன் அண்ட் சன்ஸ்: வெளியீட்டு உரிமத்தை பெற்றது ஏபி இன்டர்நேஷனல்!
மலையாளத்தில் உருவாகியுள்ள குடும்ப நகைச்சுவைத் திரைப்படமான 'அவராச்சன் அண்ட் சன்ஸ்' படத்தை கேரளா தவிர்த்த இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் அக்டோபர் 2 அன்று தாங்கள் வெளியிட உள்ளதாக ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லிஸ்டின் ஸ்டீபனின் மேஜிக் ஃபிரேம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பிஜு மேனன், ஸ்ரீநாத் பாசி, கணபதி, வினய் போர்ட் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். முழுநீள நகைச்சுவை கலாட்டாவாக உருவாகியுள்ள இத்திரைப்படம் அக்டோபர் காந்தி ஜெயந்தி விடுமுறை தினத்தில் வெளிவருகிறது. சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் கணிசமான திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
· Apifilms