அவராச்சன் அண்ட் சன்ஸ்: அனிதா கதாபாத்திரத்தில் பார்வதி பாபு போஸ்டரை வெளியிட்ட படக்குழு!
மேஜிக் ஃபிரேம்ஸ் சார்பில் லிஸ்டின் ஸ்டீபன் தயாரிப்பில் தம்பி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அவராச்சன் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தில், பார்வதி பாபு நடித்துள்ள 'அனிதா' கதாபாத்திரத்தின் பிரத்யேக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பிஜு மேனன், ஸ்ரீநாத் பாசி, கணபதி, வினய் போர்ட், ஜானி ஆண்டனி, கிரேஸ் ஆண்டனி என பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள ஒரு குடும்ப நகைச்சுவைத் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. ஜோசப் விஜீஷ் மற்றும் தம்பி இணைந்து எழுதியுள்ள திரைக்கதை ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் வரும் அக்டோபர் 2 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்த கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டி வருகின்றன.
· Apifilms